Published : 27,Sep 2021 07:29 AM

புதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு

Prime-Minister-narendramodi-visit-at-the-Central-Vista-site

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

64ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் அமையும் வகையில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இங்கு திடீரென சென்ற பிரதமர் மோடி, பணிகளை ஆய்வு செய்தார். கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.

Image

அடுத்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மக்களவையில் 888 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்