[X] Close

டிராவிட், தோனி, கோலி... சுவையான நினைவுகளை வரிசைப்படுத்திய சுரேஷ் ரெய்னா

விளையாட்டு

Suresh-Raina-ranks-Rahul-Dravid-MS-Dhoni-Virat-Kohli-as-captains

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தோனி மற்றும் கோலியுடனான தன்னுடைய சுவையான நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் "சின்னதல" சுரேஷ் ரெய்னா.


Advertisement

யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ரெய்னா "தோனி அண்ணனுடன் அவர் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தபோதும் கேப்டனாக உயர்ந்தபோதும் தொடர்ந்து அவருடன் விளையாடி இருக்கிறேன். நான் இந்திய அணிக்குள் நுழைந்தபோதுதான் அணி புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது. அப்போது ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு தோனி, டிராவிட், கோலியுடனான நினைவுகளே அதிகம். நானும் கோலியும் பல முறை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருக்கிறோம். சில சாதனைகளையும் படைத்திருக்கிறோம்" என்றார்.

image


Advertisement

மேலும் பேசிய ரெய்னா "கேப்டன்களாக வரிசைப்படுத்த வேண்டுமென்றால் தோனி, ராகுல் டிராவிட் பின்பு விராட் கோலி" என தெரிவித்துள்ளார். இப்போது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாில் ஐபிஎல் போட்டிகளுக்காக முகாமிட்டு இருக்கிறது. சிஎஸ்கே அணி அமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்லில் முதல் போட்டியில் வரும் 19 ஆம் தேதி மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா. அதே நாளில்தான் தோனியும் அதற்கு முன்பாக தன் ஓய்வை அறிவித்தார். மேலும் 2020 ஆம் ஆண்டு சீசனில் சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்கள் காரணமாக ஐபிஎல்லில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close