யூ-டியூபர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிடம் அவர்கள் மீதான குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட யூ-டியூபர் மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிருத்திகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 32 புகார்களின் அடிப்படையில் 32 சாட்சியங்களைக் கொண்டு யூ-டியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குவதற்காக யூ-டியூபர் பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருவரிடம் குற்றப் பத்திரிகை நகலை நீதிமன்றம் வழங்கியது. வழக்கை எதிர்கொள்வதாக இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகு, வரும் 28ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கப்படும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.
Loading More post
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?