Published : 06,Sep 2021 02:42 PM
ஹரி - அருண் விஜய் படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்த ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம்

ஹரி - அருண் விஜய் இணைந்துள்ள ‘அருண் விஜய் 33’ படத்தில் வில்லனாக நடிக்கும் கருடா ராம் காட்சிகள் நிறைவடைந்துள்ளன.
இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்ற யோகி பாபு, சினேகேன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில்,வில்லனாக நடிக்கும் கருடா ராமின் காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, அவரை படக்குழுவினர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்கள். இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் கருடா ராமுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
படக்குழுவினரின் அன்பில் நெகிழ்ந்த கருடா ராம், நெகிழ்ச்சியுடன் “’கேஜிஎஃப்’ படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால், இதுபோல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.