Published : 03,Sep 2021 07:40 PM

நாமக்கல், அரியலூரில் 3 மாணவிகளுக்கு கொரோனா

3-students-tested-corona-positive

தமிழகத்தில் பள்ளிகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் 2 மாவட்டங்களில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கு வந்த அவருக்கு அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 99 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

image

மாணவி இருந்த வகுப்பறை மட்டும் மூடப்பட்ட நிலையில் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரியலூரிலும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரி அரசு உதவி பெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இருவருடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: "வருமானத்துக்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜிக்கு 73% சொத்து" - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்