Published : 04,Jan 2017 03:12 AM

இன்று முதல் அதிமுக மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் சசிகலா

sasikala-meet-admk-district-officers-from-today

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் களநிலவரங்கள் குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ள‌வேண்டிய ஏற்பாடுகளை முதலமை‌ச்சர் ஒ பன்னீர்செல்வம், மற்‌றும் டி ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்