[X] Close

தியேட்டர்களில் வெளியாகும் கங்கனா ரனாவத்தின் ’தலைவி’: வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா

kangana-ranaut-thalaivi-releasing-in-theatres-on-September-10th

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.


Advertisement

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கி முடித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் கொடுத்தது.

image


Advertisement

இந்நிலையில் திரையரங்குகளை திறக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’தலைவி’ படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அதே தேதியில், சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படம் ஓடிடியிலும், விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ நேரடியாக டிவியிலும் வெளியாகிறது.


Advertisement

Advertisement
[X] Close