[X] Close

ஆப்கானிலிருந்து இந்தியா வர விரும்புவோருக்கு இ-விசா

இந்தியா

Central-Government-has-said-that-those-who-want-to-come-to-India-from-Afghanistan-will-be-issued-an-emergency-e-visa
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர விரும்புவோருக்கு அவசரகால இ-விசா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. பலர் அங்கிருந்து வெளியேற விரும்புகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர விரும்புவோருக்கு இ-விசா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய வழியாக விண்ணப்பிப்பவர்களுக்கு முதல்கட்டமாக 6 மாத காலத்துக்கான விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement

Advertisement
[X] Close