[X] Close

தடாகம் செங்கல்சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? - கோவை ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு

District-collector-inspects-Brick-kiln-in-Thadagam

தடாகம் பள்ளத்தாக்கு செங்கல் சூளைகள் மீது எழுப்பப்பட்ட விதிமீறல் புகாரில், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.


Advertisement

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தனர்.

image


Advertisement

அதில், "தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங்குள்ள செயல்பாடுகளை எப்படி முறைப்படுத்தலாம் என்பதை தெரிவிக்கவும் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிமவளத்துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் அந்தப்பகுதியை ஆய்வு செய்து அங்குள்ள நிலவரம், விதிமீறல் இருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

image

இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் சமீரன், தடாகம் பகுதியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய்துறை, கனிமவளத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த வழக்கில், வரும் 26-ம் தேதிக்குள், கூட்டுக் கமிட்டி தன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்த பகுதியில் தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close