[X] Close

துருக்கி: காட்டுத்தீயை அணைக்கச் சென்ற ரஷ்ய தீயணைப்பு விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

உலகம்

A-Russian-firefighter-has-crashed-in-Turkey--killing-eight-people
ரஷ்ய தீயணைப்பு விமானம் துருக்கியில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியில் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு உதவிடும் வகையில் ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான தீயணைப்பு விமானம் ஒன்று துருக்கிக்கு அனுப்பப்பட்டது. தீயை அணைக்கும் பணிக்குச் புறப்பட்ட அதில் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேரும் துருக்கி நாட்டவர் 3 பேரும் இருந்தனர்.
 
image
அந்த விமானம் துருக்கியின் தென்பகுதியில் உள்ள அதானா மாகாணத்தில் தரையிறங்க முற்பட்டபோது, விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் சென்ற 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
விபத்தில் உயிரிழந்த ரஷ்ய ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புதின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள துருக்கி அதிபர் தயீர் எர்டோகன், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
[X] Close