Published : 08,Aug 2021 08:01 AM
அட்டகத்தி தயாரிப்பாளர் சி.வி.குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொற்றவை' டீசர் ரீலிஸ்

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொற்றவை' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது கொற்றவை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வரலாற்றுப் பின்னணியில் அட்வென்சர் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு, தமிழ்மகன் என்பவர் வசனம் எழுதியுள்ளார்.
சுவாரசியமான கதை பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள 'கொற்றவை' திரைப்படத்தின் டீஸர், யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.