Published : 04,Jan 2017 02:57 AM
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.. வறட்சி குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி குறித்தும், இதையொட்டி எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கவேண்டிய கோரிக்கைகள் குறித்து அலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
நதி நீர் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் இவற்றில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.