Published : 28,Jul 2021 03:33 PM

ஒலிம்பிக் : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி

Indian-Archer-Deepika-Kumari-qualified-to-play-in-the-match-before-quarter-finals-in-women-s-Individual-Recurve-Archery-in-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

மகளிர் தனிநபர் (ரீகர்வ்) இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் மியூசினோ ஜெனிஃபரை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் தீபிகா குமாரி. இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட உள்ளார். 

25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என ஐந்து செட்கள் இந்த ஆட்டத்தில் இருவரும் விளையாடினர். இரண்டு, மூன்று மற்றும் ஐந்தவாது செட்டை தீபிகா குமாரி கைப்பற்றி வெற்றிப்பெற்றுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்