[X] Close

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

இந்தியா,டெக்னாலஜி

Delhi-High-Court-Refuses-to-stay-Information-technology-Rules-2021-regulating-Digital-News-Media

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை முறைப்படுத்தும் மத்திய அரசு வகுத்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப நெறிமுறைகள் மற்றும் விதிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துள்ளனர். 

ஃபவுண்டேஷன் பார் இண்டிபென்டென்ட் ஜர்னலிசம், தி வொயர், க்வின்ட் டிஜிட்டல் மீடியா, ஆல்ட் நியூஸ் மாதிரியான ஆன்லைன் ஊடகங்கள் 2021 புதிய தகவல் தொழில்நுட்ப நெறிமுறைகள் மற்றும் விதிகளுக்கு தடை வேண்டும் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தன. 

இந்த வழக்கை விசாரித்த விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் ஹரி ஷங்கர் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் “இந்த விவகாரம் வழக்கமான நீதிபதி அமர்வு விசாரணையில் நிலுவையில் உள்ளது. அவர்கள் இது தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதனால் இந்த நெறிமுறைகள் மற்றும் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவித இடைக்கால தடையும் இப்போதைக்கு கோர முடியாது” என தெரிவித்துள்ளனர். 


Advertisement

விடுப்பு காலம் முடிந்து நீதிமன்றம் செயல்பட தொடங்கியவுடன் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி ஆன்லைன் ஊடகத்தின் சார்பில் நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close