குடியரசுத் தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு 3ஆவது பரிசு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு 3ஆவது பரிசு
குடியரசுத் தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு 3ஆவது பரிசு

டெல்லியில் நடைபெற்ற 68 ஆவது குடியரசுத் தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற தமிழக அரசின் ஊர்திக்கு 3 ஆவது பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியரசுத் தினத்தின் போதும் நடைபெறும் அணிவகுப்பில், மாநிலங்களின் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் வகையிலான ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில், கரகாட்டத்தை முதன்மையாக கொண்டு இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எனவே தமிழக அரசின் அந்த ஊர்திக்கு 3 ஆவது பரிசு வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச ஊர்தி முதல் பரிசையும், திரிபுரா ஊர்தி இரண்டாம் பரிசையும் பெற்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com