Published : 31,Jul 2017 12:40 PM

கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு!

TTV-Dinakaran-calls-for-party-executives

அதிமுக அம்மா அணி மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்திற்கு டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகியிருக்கும் தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து மீண்டும் கட்சிப் பணியை தொடரப்போவதாக தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 5ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அம்மா அணியில் அவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகளுக்கும் இடையே விரிசல் இருக்கிறது. இந்நிலையில், டிடிவி தினகரனின் அழைப்பை ஏற்று எத்தனை நிர்வாகிகள் வருவார்கள், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. டிடிவி தினகரனுக்கு 37 எம்எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்