[X] Close

சீன பொருட்கள் அதிக நாட்களுக்கு நீடிக்காது: குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கிண்டல் 

Chinese-products-will-not-last-long--boxer-Vijender-Singh-Kundal

சீன குத்துச்சண்டை வீரருக்கு எதிரான போட்டி குறித்து பேசிய இந்திய வீரர் விஜேந்தர் சிங், சீன பொருட்கள் அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று தெரிவித்தார். 


Advertisement

தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய வீரர் விஜேந்தர் சிங், இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். அடுத்ததாக மும்பையில் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் போட்டியில் சீன வீரர் ஜுல்பிகர் மைமைதியாலியை எதிர்கொள்ள உள்ளார். போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜேந்தர், அந்த போட்டியை 45 விநாடிகளுக்குள் முடிக்க முயற்சி செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார். சீன பொருட்கள் அதிக நாட்கள் நீடிக்காது என்பதால் போட்டியை விரைவில் தம்மால் முடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய பசிபிக் மிடில் வெயிட் சாம்பியனான விஜேந்தர், ஒரியண்டல் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியனான ஜுல்ஃபிகரை மும்பையின் வொர்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சந்திக்கிறார். இந்த போட்டியில் வெல்பவர் இரு பட்டங்களையும் கொண்டு செல்வார் என்று குறிப்பிடத்தக்கது.    
 


Advertisement

Advertisement
[X] Close