[X] Close

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கல்வி உதவித்தொகையை நிவாரணமாக கொடுத்த மாணவர்!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Ram-Santhosh-A-Tamil-Department-Doctor-of-Philosophy-Research-Student-from-Dravidian-University-who-donated-his-Educational-scholarship-to-the-General-Relief-Fund-of-the-Chief-Minister-of-Tamil-Nadu-as-COVID19-fund

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது கல்வி உதவித்தொகையில் ஒரு பங்கை நிவாரணமாக கொடுத்து உதவியுள்ளார் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார். 


Advertisement

அதையடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் உட்பட பலரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவின் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக உள்ள வாணியம்பாடியைச் சேர்ந்த ராம் சந்தோஷ் தனது கல்வித் உதவித்தொகையை கொரோனா நிவாரணமாக கொடுத்து உதவி உள்ளார். 

“நிலுவையிலிருந்த  பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உதவித்தொகை  கிடைக்கப் பெற்றதும் அதை அப்படியே தமிழக முதலமைச்சரின் tncmprf@iob நிதிக்கு அனுப்பிவிட்டேன்” என ட்வீட் செய்துள்ளார் அவர். தனது நன்கொடையை அவர் புதன் அன்று வழங்கி உள்ளார். 


Advertisement

அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ‘கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும் அல்லவா’ என அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close