பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிஷன் ரெட்டியின் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியதாவது, “ தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கும் நாங்கள், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai