[X] Close >

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம்; ஒரே நாளில் 89,129 பேருக்கு தொற்று உறுதி; 714 பேர் பலி

India-reports-89129-new-COVID19-cases-44202-discharges-and-714-deaths-in-the-last-24-hours-as-per-the-Union-Health-Ministry

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. இன்று தொடர்ந்து 24-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 89,129 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முந்தைய நாளில் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 8  ஆயிரம் அதிகரித்துள்ளது.

image


Advertisement

இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 714  பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 7,30,54,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close