[X] Close >

தெலுங்கானா: சிறுவர்களை தாக்கி வலுக்கட்டாயமாக மாட்டு சாணத்தை சாப்பிட வைத்த கொடுமை!

Two-Boys-who-entered-in-Orchard-were-beaten-and-forced-to-eat-cow-dung-and-two-persons-arrested-by-Police-Arrested--in-Telangana-State-India-Crime

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை தேடி வந்த 17 மற்றும் 15 வயதேயான இரண்டு சிறுவர்களை தாக்கி, வலுக்கட்டாயமாக மாட்டும் சாணத்தை சாப்பிட சொன்ன இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். 


Advertisement

தோட்டத்தில் காவல் வேலையில் ஈடுபட்டவர்கள் அந்த சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் மரத்தில் கட்டி போட்டு, அடித்து, சித்திரவதை செய்துள்ளனர். தொடர்ந்து மாட்டு சாணத்தையும் சாப்பிட சொல்லி நிரபந்தித்துள்ளனர். அப்போது அதனை தோட்டத்தில் காவல் வேலை பார்த்த காவலாளி செல்போனில் படம் பிடித்துள்ளார். அதோடு அதனை நண்பர்களுடன் பகிர்ந்தும் உள்ளார் அவர். 

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயர்களில் ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நடந்ததை அவர்கள் விவரித்துள்ளனர். 


Advertisement

கைது செய்யபட்டுள்ள இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 342, 324, 504 மற்றும் சிறுவர்களை துன்புறுத்தியமைக்காக குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட பிரிவு 75 அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close