கால்பந்தாட்ட உலகின் தற்போதைய நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் அவரது அட்டாக்கிங் ஆட்டம்.
இந்நிலையில், அண்மையில் முடிந்த கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் செர்பிய அணிக்கு எதிராக போர்ச்சுகல் 2 - 2 என ஆட்டத்தை சமனில் முடித்தது. வெற்றிக்கான கோலை ரொனால்டோ அடித்தும் அது தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதனால் விரக்தியடைந்த அவர் தனது ஆர்ம் பேண்டை மைதானத்தில் வீசி எறிந்தார்.
அதனை கைப்பற்றிய மைதான ஊழியர் தொண்டு நிறுவனம் ஒன்றிடம் கொடுத்துள்ளார். நீல நிறத்தில் இருக்கும் அந்த பேண்டில் ‘C’ என குறிபிடப்பட்டுள்ளது. அதனை அரிய வகை நோயினால் பாதிக்கபட்ட குழந்தையின் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் நிதியை திரட்டும் விதமாக ஏலத்தில் விட்டுள்ளது அந்த தொண்டு நிறுவனம்.
Cristiano Ronaldo walked off the pitch before the final whistle at the end of the Serbia-Portugal game, and threw his captain's armband in frustration. pic.twitter.com/I2i9uwkPhM — ESPN FC (@ESPNFC) March 27, 2021
மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் இந்த ஏலம் நடைபெறுகிறது. எப்படியும் பெரிய விலைக்கு அது ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டம் சமானில் முடிந்த பிறகு ரொனால்டோவின் செயலுக்கு சிலர் கண்டனம் தெரிவித்தும் உள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்