இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் நிலையில், நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 72,330 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த அக்டோபருக்குப் பின் இது அதிகபட்ச தினசரி பாதிப்பாக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொரோனா பாதிப்பு 39,544 ஆக உள்ளது. நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.
மொத்த கொரோனா பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 75-வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி