[X] Close >

அன்று 'சித்தாந்தங்கள்', இன்று 'சாதி'... - மேற்கு வங்க தேர்தல்களில் ஓங்கும் அடையாள அரசியல்!

From-ideologies-to-caste--the-emerging-identity-politics-in-West-Bengal-elections-2021

மேற்கு வங்கத்தின் தேர்தல் அரசியலில் சாதி மற்றும் மத அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அடையாளங்கள் ஒருபோதும் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததில்லை. அங்கு, வர்க்க ரீதியான ஏற்றத் தாழ்வுகள்தான் நிறைந்து காணப்படுகின்றன. மாநிலத்தின் தீவிர அரசியல் போட்டியில் கட்சிகள் போராடியது, வர்க்கத்துக்காகவும் வெகுஜனங்களுக்காகவும்தான். ஆனால், இப்போது காட்சிகள் மாறத் தொடங்கியிருக்கின்றன.


Advertisement

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மேற்கு வங்கத்தின் சமூக முற்போக்கான சிந்தனைகள், அரசியல் சீர்திருத்தங்களிலிருந்து விலகி 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு அழைத்துச்செல்லும் வகையில் மாறியுள்ளது. சாதி அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, சாதிகளின் கூற்றுக்களை ஏற்றுக்கொண்ட அப்போதிருந்த தருணமாக இன்றைய காலக்கட்டம் மாறிவருகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இடஒதுக்கீடு பட்டியலில் சாதிகளைச் சேர்ப்பதற்கான போட்டியை உருவாக்ககூடும் என்று அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், இந்து அடையாளத்தை வலியுறுத்தவேண்டிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்ற பார்வையும் அங்கு இருக்கிறது.


Advertisement

மேற்கு வங்கம் அடிப்படையில் ஒரு வர்க்க ரீதியான ஏற்றத் தாழ்வு பிரச்னைகளைக் கொண்ட மாநிலம். தற்போது, அது மெள்ள மெள்ள நகர்ந்து சாதிய, மத ரீதியான விஷயங்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருக்கும் மஹிஷ்யர்கள், தமுல், சஹாஸ் மற்றும் திலிஸ் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டைப் பெற, இப்பிரிவினர் ஓபிசி-யில் சேர்க்கப்படுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்லி, தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு பர்தமான் உள்ளிட்ட தென் வங்கத்தின் பல மாவட்டங்களில் மஹிஷ்யர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேற்கண்ட பகுதியில் இவர்கள் மிகப்பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க சாதிக் குழுவாகவும் திகழ்கின்றனர். இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாமல், நந்திகிராமின் முக்கியமான தொகுதியிலும் இந்தப் பிரிவினர் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இந்தத் தொகுதியில்தான் பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். மஹிஷ்யர்கள், தமுஸ், சஹாஸ் மற்றும் திலீஸுக்கான இடஒதுக்கீடு பெற சிறப்பு பணிக்குழுவை அமைப்பதற்கான முடிவு அரசியல் ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

image

மஹிஷ்யர்களை, குறிப்பாக ஓபிசி இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கும் இந்த நடவடிக்கை, பல சாதி சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட சாதி நிலையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. மஹிஷ்யர்கள், முதலில் ஒரு மீன்பிடி சமூகமாக இருந்தனர். ஆனால், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் விவசாயத்திற்குச் சென்று கடந்த 100 ஆண்டுகளில் பணக்கார விவசாயிகளாக மாறினர். மஹிஷ்யர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை என்பது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பாட்டீதர் அல்லது படேல் மற்றும் மராட்டியர்களை ஓபிசிகளாக சேர்ப்பதைப் போன்றது.


Advertisement

மஹிஷ்யர்கள், தமுல்கள், திலிஸ் மற்றும் சஹாஸ் (அனைத்து சஹாஸ்களும் பட்டியல் சாதியினர் அல்ல) ஆகிய பிரிவினரை இடஒதுக்கீடு பட்டியலில் சேர்ப்பது திரிணாமுல் காங்கிரஸின் முக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. காரணம், மிட்னாபூர், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு மாவட்டங்களில் 35 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திலும் மஹிஷ்யர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்களில், 64 தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஆறு முதல் எட்டு வரை மஹிஷ்யா வாக்காளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவில் உள்ளன. இது திரிணாமூல் காங்கிரஸுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். மற்ற இரண்டு மாவட்டங்களில், 18 தொகுதிகளைக் கொண்ட ஹூக்லியும், 16 தொகுதிகளைக் கொண்ட ஹவுராவிலும் இருக்கும் மஹிஷ்யா மக்களின் எண்ணிக்கை காரணமாக திரிணாமூல் காங்கிரஸின் ஓபிசி அறிவிப்பு அக்கட்சிக்கு தேர்தலில் கைகொடுத்து உயர்த்த உதவும்.

முந்தைய மிட்னாபூர், ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகிய மாவட்டங்களில், திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 18 இடங்களில் எட்டு இடங்களை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது. ஹூக்லி, ஹவுரா மற்றும் தெற்கு 24 பர்கானாவின் சில பகுதிகளில் பாஜகவின் பலம் தற்போது குறைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

திரிணாமுல் காங்கிரஸால் மஹிஷியர்களுக்கும், மற்ற மூன்று சமூகத்தினருக்கும் ஓபிசி இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது என்பது சரியான அரசியல் நகர்வாகும். இது, இந்த சமூகங்கள் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் மாவட்டங்களில் எதிரணியினருக்கு போட்டியை கடுமையாக்க கூடும். படித்த மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு பெரும் கனவுகளை விதைத்துள்ளது.

விவசாயத்திலிருந்து 'ஒயிட் காலர்' வேலையை நோக்கிச் செல்லும் போக்கு கூடி வருகிறது. தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதோடு, ஓபிசி, அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான மாநில அரசு வேலைகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமான இடஒதுக்கீடு இருப்பது மஹிஷ்யர்களுக்கும், மற்ற மூன்று சமூகத்தினருக்கும் ஒரு குறைகளாக இருந்திருக்கலாம்.

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸின் இந்த அறிவிப்பு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் மறுக்கப்பட்ட மஹிஷியர்கள் இனி அரசாங்க வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் தகுதி பெற முடியும் என்பது அந்த மக்களுக்கு கிடைத்த உத்வேகம். இது வாக்குகளாக அறுவடையாகும் என்பதில் ஐயமில்லை என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

இதையடுத்து, மேற்கண்ட சமூகத்தினர் ஓபிசி பட்டியலுக்கு தகுதியுடையவர்கள் என மார்ச் 16-ம் தேதி ஜேபி நட்டா வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. அரசியல் அறிஞர்களின் கூற்றின்படி, எதிர்காலத்தில் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

- உறுதுணை கட்டுரை: India Today

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close