[X] Close >

சரிந்த விக்கெட்டுகள்... தனி ஒருவனாக வானவேடிக்கை காட்டிய விராட் கோலி!

Virat-Kohli-has-given-awesome-performance-in-Ahmedabad-T20-match-against-England

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.


Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகி ராகுல் ஏமாற்றம் அளித்தார்.

image


Advertisement

கடந்தப் போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசிய இஷான் கிஷன், இந்தப் போட்டியில் 4 ரன்னில் நடையைக் கட்டினார். ரோகித் சர்மாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க 24 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விராட் கோலியும், ரிஷப் பண்ட்டும் இணைந்து நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 25 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 9 ரன்னில் ஏமாற்றினார்.

image

விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டே வந்தாலும் தனி ஆளாக விராட் கோலி வானவேடிக்கை காட்டினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் பின்னர் விஸ்வரூபம் எடுத்து அதிரடி காட்டினார். ஜோர்தன் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் கடந்த பின்னர், அவர் ஆர்ச்சர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார்.


Advertisement

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில், 4 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலிக்கு இறுதியில் ஒத்துழைப்பு அளித்த ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது. விராட் கோலி தன்னுடைய 27வது சர்வதேச அரைசதத்தை டி20 போட்டிகளில் நிறைவு செய்தார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close