[X] Close >

கணவர்களை சந்திக்க 2 ஆண்டுகள் காத்திருப்பு: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த மனைவிகள்!

Two-Brides-From-Pakistan-Cross-The-Border--Reunite-With-Indian-Husbands-After-Two-Years

ராஜஸ்தானைச் சேர்ந்த கணவர்களை தேடி பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இந்தியா வந்துள்ளனர்.


Advertisement

2019ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞரை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வார் என்ற பெண் திருமணம் செய்துகொண்டார். அதேபோல், நேபால் சிங் பாட்டி என்பவரும் கைலாஷ் பாயும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்த நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்று இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவியது. அதனால் எல்லைதாண்டி செல்வது சட்டரீதியாகவும் சிக்கலானது. இதனால் மணமகள் இருவருமே பாகிஸ்தானிலேயே தங்கினர்.


Advertisement

imageஇந்நிலையில் தற்போது இந்தியா வருவதற்கான வழிமுறைகள் முடிக்கப்பட்டு இருவரும் தங்களது கணவர்களை சந்தித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வார் , “திருமணம் முடிந்தவுடன் நான் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டேன்.விசா நிராகரிக்கப்பட்டது. என் பெற்றோர் என்னுடைய எதிர்காலம் குறித்து கவலை அடைந்தனர். ஆனால் தற்போது நான் இந்தியா வந்துள்ளேன். திருமணம் ஆனதையே இப்போதுதான் உணர்கிறேன். இந்தியா வந்தது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள மணமகன் மகேந்திர சிங், “எங்களுக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் பாகிஸ்தானில் இருந்தேன். ஆனால் மனைவியை இந்தியா அழைத்துவர முடியவில்லை. பல நடவடிக்கைகளுக்கு பின் தற்போது மனைவியை இந்தியா அழைத்து வந்துள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close