[X] Close >

மூளைச் சிதைவடைந்த 2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை!

Brain-disturbed-Doctors-achieve-success-by-saving-the-life-of-a-2-year-old-child

அமெரிக்காவில் மூளைச் சிதைவால் பாதிக்கப்பட்ட இரண்டே வயதான பெண் குழந்தையின் உயிரை காப்பாற்றி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 


Advertisement

ஈடன் என்ற 2 வயது பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கும் போது தவறி விழுந்துள்ளது. அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து குழந்தை நீரில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்தபோது அக்குழந்தையின் இதயத்துடிப்பு நின்று போயிருந்தது. மூளையில் உள்ள திசுக்கள் சிதைவடைந்த காரணத்தால் இதயத்தின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. குழந்தையால் இனி பேசவோ, நடக்கவோ, தன்னை சுற்றி நடப்பதை உணரவோ முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். 

அதன் பிறகு ஆர்கன்சாவின் ஃபாயௌட்வில்வில் உள்ள வாஷிங்டன் பிராந்திய மருத்துவ மையத்தில் மருத்துவர்கள் ஈடனுக்கு சிகிச்சை அளித்தனர். 48 நாட்கள்  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் உயரழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சை (Hyperbaric Oxygen Therapy - HBOT)அந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் வெற்றிகரமாக மூளைச் சிதைவு சரிசெய்யப்பட்டது. உயிர் பிழைத்த அந்த குழந்தை பூரண குணமடைய மேலும் சில சிகிச்சைகளை தொடர வேண்டும் என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close