பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
இதைத்தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி-யை தடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!