சத்தீஸ்கரில் ஆசைக்கு இணங்க மறுத்த நண்பனின் தாயை அடித்துக் கொலைசெய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசாமுந்த் மாவட்டத்திலுள்ள பாஸ்னா காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி படேல் என்கிற சிந்து. 20 வயதான சிந்து புதன்கிழமை இரவு தனது கிராமத்திலுள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது சிந்துவுடைய நண்பனின் 42 வயதான தாய், அவர் வீட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார். வயலிலிருக்கும் அறுவடை இயந்திரத்தை பார்க்க அழைத்திருந்ததாக கூறியிருக்கிறார். வீட்டிற்கு அருகிலேயே வயல் இருந்ததால் அந்த பெண் சிந்துவை அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்கவே, ஊர்மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர். அங்கு தரையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணை பார்த்த ஊரார் அதிர்ச்சியடைந்தனர். சுயநினைவை இழப்பதற்கு முன்பே அந்த பெண், சிந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு மறுத்ததால் அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஊரார் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றிருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை உயிரிழந்துவிட்டார். தப்பிச்சென்ற சிந்துவை போலீஸார் தேடி கைதுசெய்துள்ளனர்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ