[X] Close >

ஃபேஸ்புக், கூகுளுக்கு கடிவாளம் போடும் சட்டத்தை இயற்றியது ஆஸ்திரேலியா

Australia-passes-law-to-share-the-profit-from-Facebook-and-Google-for-the-contents-which-was-generated-by-Australian-Media

ஆஸ்திரேலிய நாட்டு செய்தி ஊடகங்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் பகிரும் கண்டென்ட்டுகளுக்கு கிடைக்கும் லாபத்தில், அந்நிறுவனங்களுக்கு  பங்கு கொடுக்க வேண்டுமென சொல்லி சட்டம் இயற்றியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. முன்னதாக இந்த சட்டத்திற்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருந்தன ஃபேஸ்புக்கும், கூகுளும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை என சொல்லியிருந்தது கூகுள். ஆனால் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக தீர்வினால் அதை கைவிட்டது கூகுள். 


Advertisement

ஆனால் ஃபேஸ்புக் இதில் முரண்பட்டது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் ஆஸ்திரேலிய செய்தி ஊடக நிறுவனங்களின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியது அந்நிறுவனம். இந்த நிலையில் தான் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஊடக நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் உடன்பாடு போட்டுக்கொண்டு கிடைக்கின்ற லாபத்தை பகிரும் என சொல்லப்படுகிறது.

image


Advertisement

இந்தச்சூழலில் தான் தற்போது ஆஸ்திரேலிய அரசு இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றியுள்ளது. இது ஆரம்பம் தான் என்றாலும் அடுத்தடுத்து நாட்களில் மற்ற உலக நாடுகளும் இது மாதிரியான சட்டத்தை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close