முதுமலை அருகே வனப்பகுதி சாலையில் காட்டு யானையிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ளது வாழை தோட்டம் பகுதி. இங்குள்ள சீகூர் பாலம் அருகே கடந்த 20 ஆம் தேதி காட்டு யானை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. யானை சாலையை கடக்க முயன்றதை கண்ட வாகன ஓட்டிகள் அலட்சியமாக சாலையில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்போது கோபமடைந்த யானை சாலையில் வாகனத்தில் இருந்தபடி வேடிக்கை பார்த்தவர்களை துரத்தியுள்ளது. இதில் இருசக்கர வாசனத்தில் நின்ற பெண்ணை நோக்கி யானை செல்ல, அவர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
யானை தாக்கும் தூரத்தில் பெண் இருந்த போதும், அவரை ஒன்றும் செய்யவில்லை. இருப்பினும் வாகனத்தை லேசாக சேதபடுத்தியுள்ளது. வனப்பகுதி சாலை வழியாக பயணிப்பவர்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி