புதுச்சேரியில் தனது ஆளுமைக்கு உட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நேற்று காலை பொறுப்பேற்றார் தமிழிசை செளந்தரராஜன். பொறுப்பேற்ற நாளே அவர் கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடியில் ஊட்டச்சத்து உணவு குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியர்களை சந்தித்த அவர் குழந்தைகள் மீது பற்று உள்ளதால் அங்கன்வாடியில் எத்தகைய ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது என ஆய்வு செய்தேன். அரிசி, கேழ்வரகு வாரத்தில் ஒரு முட்டை குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஊட்டச்சத்து உணவை மேம்படுத்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி அல்லது பணமாக வழங்கலாமா என்பது குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்களுக்கு எது நல்லதோ அதை செயல்படுத்துவேன் என்று கூறினார். மேலும் தனது ஆளுமைக்கு உட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?