பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்கள்.
ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி, கைதி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு, சமீபத்தில்,இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
”மகாபாரதத்துல கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும் கெளரவர்கள் மாறவில்லை. நீ ஒரு வாய்ப்புத்தானே கேக்குற தர்றேன். மகாபாரதத்துல கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நின்றிருந்தார். அதே கிருஷ்ணன் கெளரவர்கள் பக்கம் நின்றிருந்தா? மகாபாரதத்தை ஒருதடவை போர் இல்லாம படிச்சிப் பாருங்க சார்” என்று கார்த்தி பேசும் வசங்கள் வரவேற்பை பெற்றன.
இதன், முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், கார்த்தி,ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு உள்ளிட்டோர் இருக்கும் படத்தின் புதிய படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
Loading More post
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'': சரத்குமார் பேட்டி
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'