பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் மரண வழக்கை சென்னை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் , 24 வயதான மகன் சதீஷ்குமார், கடந்த 2011ம் ஆண்டு ரத்த காயங்களுடன் ஏரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மகன் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து வழக்கு சென்னை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.ஐ விசாரித்து தற்கொலை என அறிக்கை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை முடித்து வைக்க முயற்சிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் யார் குற்றவாளி என்பதை கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போது விசாரணையை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்கள் கிடைத்தால் உரிய முறையில் விசாரித்து சட்டத்தின் முன் குற்றவாளியை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'