நாட்றம்பள்ளி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் கொடூர கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அருகிலுள்ள நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சடலமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் அடுத்த கங்காவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (38) என்பதும், இவர் ஊத்தங்கரை ஜோதி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசாமி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் சிவக்குமார் பணியாற்றிய அதே பள்ளியில் உடன் பணிபுரிந்த பெண் ஆசிரியைக்கும் சிவக்குமாருக்கும் திருமணத்தை மீறிய பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஆசிரியையின் கணவர் இளங்கோ, (இவர் ஊத்தங்கரை பேரூராட்சியில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.) ஊத்தங்கரை இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைச்சாமியிடம் ஆசிரியர் சிவக்குமாரின் கை கால்களை உடைத்து விடுமாறு கூறி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற ஆசிரியர் சிவக்குமாரை பின் தொடர்ந்த கூலிப்படையினர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை வழிமறித்து வாடகைக்கு எடுத்து வரப்பட்ட ஸ்கார்பியோ காரில் கடத்தியதோடு, அவரது இருசக்கர வாகனத்தை மினி லாரியில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே சிவக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் நாட்றம்பள்ளி அடுத்த ஆள் நடமாட்டமில்லாத பகுதியான பங்களாமேடு ரயில்வே தண்டவாளம் அருகே சிவக்குமாரை சரமாரியாக தாக்கி கை, காலை கட்டி வீசியுள்ளனர். ஒரு கட்டத்தில் அடித்தது போதாதென்று கொலை செய்ய முடிவு செய்து முதலில் ஸ்கார்பியோ காரை வைத்து சிவக்குமார் தலையில் ஏற்றி உள்ளனர். கார் டயரில் தலை நசுங்காததால் மீண்டும் மினி லாரியை வைத்து தலையில் ஏற்றி நசுக்கி கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு சிவக்குமாரின் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் சாணம் பூசி வெலக்கல்நத்தம் பகுதியில் வீசி சென்றுள்ளனர்.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் ஆசிரியர் சிவக்குமாருக்கு மேலும் பல பெண்களுடன் தகாத உறவு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கூலிப்படை கும்பலின் தலைவன் பிரபல ரவுடி வெள்ளைச்சாமி, ஆசிரியையின் கணவர் இளங்கோ உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். தகாத உறவு விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரை, ஆசிரியையின் கணவர் கூலிப்படையை வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி