சேலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த 9 மாதமாக மூடியிருந்த பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும்ம் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நேற்று சேலம் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!