[X] Close >

சண்டைகாட்சிக்காக தென் ஆப்பிரிக்கா செல்லும் 'வலிமை' படக்குழு!

Ajith-Valimai-team-to-move-to-South-Africa-next

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் சண்டைக்காட்சிகள் தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட இருக்கின்றன. 


Advertisement

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரான போனிகபூர், அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்தார். அதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. இந்தப்படத்தில் நடிகர் ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார்.

image


Advertisement

முன்னதாக வலிமை படத்தின் படப்பிடிப்பு குஜராத், ராஜஸ்தான், புனே உள்ளிட்ட வடமாநிலங்களின் பல இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது மீதமுள்ள படக்காட்சிகளை தென் ஆப்பிரிக்காவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அங்கு படத்தின் சில முக்கியமான சண்டைக்காட்சிகளை படக்குழு எடுக்க இருப்பதாக தெரிகிறது. இதற்காக வலிமை படத்தின் இயக்குநர் வினோத் மற்றும் அவரது குழுவும் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளது.

இந்த சண்டைக்காட்சிகள் படத்தின் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனக்கூறப்படுகிறது. இத்துடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியவரும் எனத் தெரிகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close