சிட்னியில் நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து நடிகர் சித்தார்த் அஸ்வினுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்தது . இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா செய்தனர். குறிப்பாக விஹாரி கிளாசிக்கான டெஸ்ட் போட்டியை ஆடினார். 161 பந்துகள் சந்தித்த அவர் 23 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், எப்படியாவது போட்டியை டிரா செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே இருவரும் ஆடினர். ஆஸி பந்துவீச்சாளர்கள் ஏதேதோ செய்து பார்த்தனர்.
ஆனால், விஹாரி-அஸ்வின் ஜோடியை அவர்களால் அசைக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர்களும் களைத்துப்போக நாளும் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா தோல்வியடையும் என்ற நிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்டனர் இரு பேட்ஸ்மேன்களும். அஸ்வின் -விஹாரி ஜோடிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ராகுல் ட்ராவிட்டின் பிறந்தநாளான இன்று ட்ராவிட்டாகவே இருவரும் மாறிவிட்டனர் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பாராட்டிவரும் நிலையில், நடிகர் சித்தார்த் அஸ்வினை தனது ட்விட்டர் பக்கத்தில் ”அஸ்வின் நீ ஒரு லெஜெண்ட். நீ இந்தப் போட்டியின் நாயகன்” என்று பாராட்டியிருக்கிறார்.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்