இயக்குநர் செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதை அடுத்து நடிகர் கார்த்தி உற்சாகமுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. கார்த்தியின் நடிப்பு கேரியரிலும் முக்கியமான படம். மன்னர்கள் என்றாலே பளீரென இருப்பார்கள் என்று காட்சியமைக்கப்பட்ட நிலையில், கருப்பு நிறத்தில் பார்த்திபனை மன்னராக காட்டியது சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை குவித்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் வெளியாகிறது. இதற்காக, நடிகர் கார்த்தி உற்சாகமுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
“ஆயிரத்தில் ஒருவன் எனக்கு இரண்டாவது படம். பருத்திவீரன் டப்பிங் போய்க்கொண்டே இருக்கும்போது செல்வாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இரண்டாவது படம் செல்வாவுடன் பண்ணப்போகிறோம். அதுவும், அது ஒரு அட்வெஞ்சர் படம் என்பது அளவில்லாத சந்தோஷம். ஏனென்றால், பருத்திவீரன் படத்திற்குப் பிறகு என்ன படம் பண்ணுவது என்ற ஐடியாவே இல்லாதபோது இவ்வளவு பெரிய படம் அப்படிங்கிறது அவ்ளோ சந்தோஷமா இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடம் அந்த டீமில் உள்ள அத்தனைப் பேரும் வேறு எந்த புராஜெக்ட் பற்றியும் யோசிக்காமல் எந்த சிந்தனையும் இல்லாமல் அர்ப்பணிப்போடு, தமிழ் சினிமாவில் இதுபோன்ற வராத சினிமா பண்ணுகிறோம்’ என்று ஆர்வத்தில் கடுமையாக உழைத்தப்படம் அது. ஒவ்வொரு நாளும் செல்வா கிரியேட் பண்ணும் விஷயங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் செல்வா ஒரு முக்கியமான இயக்குநர். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். அவ்ளோ விஷயம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.
#AayirathilOruvan in cinemas from Tomorrow, 31st December. #ஆயிரத்தில்ஒருவன் @selvaraghavan @rparthiepan @andrea_jeremiah #ReemaSen @gvprakash @ramji_ragebe1 #RRavindran pic.twitter.com/wtWMSOBXa0
— Actor Karthi (@Karthi_Offl) December 30, 2020Advertisement
அதேபோல, அந்தப் படத்தின் இசையை இப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை பத்து வருடம் கழித்து திரையில் கொண்டு வருவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு முதலில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஏனென்றால், இதுபோன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தயாரிப்பாளர் இல்லையென்றால் பத்து வருடங்களுக்கு முன்பே இவ்வளவு பெரிய முயற்சியை தமிழ் சினிமாவில் எடுத்திருக்கவே முடியாது. இந்த முயற்சி பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அதேமாதிரி ’ஆயிரத்தில் ஒருவன்’ படம் இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருப்பதற்கு உங்கள் அன்பே ஒன்றே காரணம். அந்த அன்புக்கு மிக்க நன்றி. மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் டிசம்பர் 31 திரையில்” என்று பேசியுள்ளார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’