ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி TRP விவகாரத்தில் தனக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக மும்பை போலீசாரின் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார், இந்தியாவில் தொலைக்காட்சிகளின் TRP ரேட்டிங்கை கணக்கிடும் ‘பார்க்’ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா.
2013 முதல் 2019 வரை பார்த் தாஸ்குப்தா அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அப்போது ரிபப்ளிக் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சிகளை பிரசித்தி பெற செய்யும் விதமாக அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றியுள்ள 3 கிலோ வெள்ளியும் அந்த லஞ்ச பணத்தில்தான் வாங்கியது தான் என தெரிவித்துள்ளார் அவர்.
“தாஸ்குப்தா TRP ரேட்டிங்கை கணக்கிட உதவும் பாரோமீட்டர் கருவி யார் யார் வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை அர்னாப் இடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலை அடிப்படையாக வைத்து அர்னாப் அந்த வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார் என்பதும் அம்பலபமாகியுள்ளது” என போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஸ்குப்தாவை கடந்த 24 ஆம் தேதியன்று பூனே மாவட்டத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி