[X] Close >

கீட்டோ டயட்டை இவர்களெல்லாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும் - எச்சரிக்கும் வல்லுநர்கள்!

Types-of-people-who-should-avoid-Keto-Diet

கீட்டோ டயட் முறையை அனைவரும் பின்பற்றக்கூடாது எனவும், யாரெல்லாம் தவிர்ப்பது நல்லது எனவும் விளக்குகின்றனர் வல்லுநர்கள்.


Advertisement

உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும், எடையை குறைக்க விரும்புகிறவர்களும் அதிகம் பின்பற்றுகிற ஒரு டயட் முறைதான் கீட்டொஜெனிக் என்று சொல்லக்கூடிய கீட்டோ டயட். இதிலுள்ள அதிக ஆரோக்யம் மற்றும் பலன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த டயட் பெரும்பாலானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மிகமிக குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்பை எடுத்துக்கொள்ளக்கூடிய இந்த டயட் முறையானது உடல் எடையைக் குறைக்கவும், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைத் தடுக்கவும் உதவுகிறது. அதேசமயம் அதிக கொழுப்பு எடுத்துக்கொள்ளும் டயட் முறையை நீண்டநாட்கள் பின்பற்றுவதும் சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற வேறுவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் யாரெல்லாம் இந்த கீட்டோ டயட்டை பின்பற்றக்கூடாது என்பதை விளக்குகின்றனர் வல்லுநர்கள்.


Advertisement

image

கர்ப்பிணி பெண்கள்

தாயாகப்போகிற பெண்கள் தங்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவர்கள் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க, சமச்சீரான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். கீட்டோ டயட்டானது கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்தை இழக்கச் செய்கிறது. மேலும் இது மைக்ரோ ஊட்டச்சத்துகள் சேருவதைத் தடுத்து ஆரோக்யத்தை இழக்கச் செய்கிறது.


Advertisement

image

செரிமான பிரச்னை உள்ளவர்கள்

கீட்டோ டயட் முறையின் முக்கியமான பக்கவிளைவு செரிமான பிரச்னை. குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த நார்ச்சத்து எடுத்துக்கொள்வதால் கண்டிப்பாக செரிமான பிரச்னை ஏற்படும். ஏற்கெனவே வயிறு எரிச்சல், வலி போன்ற வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்னை இருப்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

image

வேகன்ஸ் (vegans)

சைவ உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கே கீட்டோ டயட் முறை மிகவும் கடினமானதாகத்தான் இருக்கும். அதிலும் வேகன்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுமுறையை பின்பற்றுகிறவர்களுக்கு கீட்டோ டயட் மிகமிக கடினமானதாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இந்த டயட் முறையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துமிக்க உணவுகளான காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள முடியாது. அதேசமயம் வேகன்ஸ் என்பவர்கள் பால் பொருட்கள் மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்களை முற்றிலும் தவிர்ப்பதால் பழங்களும், காய்கறிகளும்தான் பிரதான உணவாக இருக்கும். எனவே இவர்கள் கீட்டோ டயட்டை பின்பற்றினால் உடல் இயக்கத்துக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள்கூட இவர்களுக்கு கிடைக்காது என்கின்றனர் வல்லுநர்கள்.

image

சிறுநீரக பிரச்னை

கீட்டோ டயட் என்பது அதிக கொழுப்பு உணவைக்கொண்டு உடலில் சேர்ந்துள்ள அதிக கொழுப்பை உடைத்து வெளியேற்ற உதவும் ஒரு டயட் முறை. இந்த முறையில் சிறுநீரகம் அதிகமாக இயங்கவேண்டும். ஏற்கெனவே சிறுநீரக பிரச்னை இருந்தால், இந்த டயட் மேலும் அழுத்தத்தைக் கொடுத்து, பலவீனமாக்கிவிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.

image

சாப்பிடுவதில் பிரச்னை

உணவு சாப்பிடுவதில் பிரச்னை இருப்பவர்களுக்கு நிலையற்ற மனநிலை ஏற்படும். எனவே அவர்களுக்கு ஒரு டயட் முறையை பின்பற்றுவது என்பது கடினமானதாக இருக்கும். கீட்டோ டயட்டை முறையாக பின்பற்றாவிட்டால், கண்டிப்பாக பலன் கிடைக்காது. இதனால் மனச்சோர்வு ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெற்றுவிட்டு டயட் முறைகளை பின்பற்றுவது நல்லது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close