பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட்டுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களும் தங்கள் தலைகளைக் காத்துக்கொள்வதற்காக ஹெல்மெட்டுடனே வருகின்றனர். அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் ஹெல்மெட்டுடன் அலுவலகப் பணிக்கு வருவதாக கூறுகிறார்கள் ஊழியர்கள். அந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டே அறிவித்திருந்தும், அலுவலகத்துக்காக புதிய கட்டடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அந்த ஆபத்தான கட்டடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், மழை நேரத்தில் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுவதும் வாடிக்கை என்கிறார்கள் பத்திரப்பதிவுத் துறை பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள்.
Loading More post
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!