வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே பற்றி எரிந்த காரில், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே விராலிபட்டி அருகே சொகுசு காரில் தீப்பற்றி எரிவதாக வாடிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர், காருக்குள் எரிந்த நிலையில் கிடந்த ஒரு ஆணின் உடலை மீட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்டது மதுரை - ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சிவானந்தத்தின் உடல் என்பது தெரியவந்தது. பழனி சென்று விட்டு மதுரை திரும்புகையில் இந்த அசம்பாவிதம் நேரிட்டிருப்பது தெரியவந்தது.
சிவானந்தம் காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் பின் இருக்கையில் மீட்கப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது. அவரை கொலை செய்து காருடன் எரிக்க முயற்சி நடந்ததா? என வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை