தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இன்று தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது திறமை ஒரு காரணம் என்றால், அவரை முதன் முதலில் இயக்கி அறிமுகமாக்கிய அவரது அண்ணன் செல்வராகவனும் மற்றொரு காரணம். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ’துள்ளுவதோ இளமை’ படத்தில் செல்வராகவன் இயக்குநராகவும் , தனுஷ் நடிகராகவும் அறிமுகமானார்கள்.
இப்படத்திற்கு யுவன் இசையமைத்தார். படமும் பாடலும் சூப்பர் ஹிட் ஆகின. அதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டணி ’காதல் கொண்டேன்’, ’புதுப்பேட்டை’ படங்களில் இணைந்தது.
Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja
Kalaippuli S Thanu @theVcreations pic.twitter.com/AKWbirnFGF — selvaraghavan (@selvaraghavan) December 23, 2020
மூன்று படங்களுமே மூவருக்கும் ஹாட்ரிக் வெற்றிதான். தற்போது, மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் எட்டாவது முறையாக இணைகிறேன் என்று குறிப்பிட்டு தனுஷ், படத்தை தயாரிக்கும் கலைப்புலி தாணுவையும் டேக் செய்துள்ளார்.
ஏற்கெனவே, புதுப்பேட்டை 2 படத்திற்காக திரைக்கதை எழுதி வருகிறேன் என்று செல்வராகவன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பதிவிட்டுள்ளதால், ரசிகர்களும் புதுப்பேட்டை 2 வாக இருக்கவேண்டும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு