நாக்பூரில் தனது காதலியின் 10 வயது தம்பியையும், பாட்டியையும் கொலை செய்துவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் 22 வயது இளைஞர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மோமின்புரா பகுதியைச் சேர்ந்தவர் மொய்ன் கான். இவருக்கு குஞ்சன் என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. குஞ்சன் தனது வீட்டில் மொய்ன் கானை நண்பர் எனக்கூறி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
ஆனால் இவர்களுடைய காதல் விவகாரம் குஞ்சன் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் குஞ்சனை கண்டித்ததுடன், அவருடைய செல்போனை உடைத்து எறிந்துவிட்டு, உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மொய்ன் கான், வியாழக்கிழமை மதியம், நாக்பூரின் ஹஜரிபாஹாத்திலுள்ள குஞ்சனின் வீட்டிற்குச் சென்று அவருடைய 10 வயது தம்பியையும், 70 வயது பாட்டி ப்ரமிளா மரோத்தி துருவையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மொய்ன்கானை தேடியபோது, அவரது உடலை மான்கபூர் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து கிட்டிகாதன் காவல்நிலைய போலீஸார் இந்திய சட்டப்பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!