ரஜினியை பாஜகதான் இயக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாகவும், புதிய கட்சி தொடங்குவதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் என்றும் ரஜினி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் எனவும் தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகும் எனவும் குறிப்பிட்டிருந்த ரஜினி, அற்புதம் அதிசயம் நிகழும் எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினியை பாஜகதான் இயக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினியை பின்னால் இருந்து யாரும் இயக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்றாலும் துணிச்சலாக ரஜினி கட்சி தொடங்குகிறார்” என்று கூறினார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்