நேற்று முதல் ஸ்டேட் பேங்க் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தோல்வியடைவதாகவும், யோனோ பயன்பாடு பிழையைக் காட்டுகிறது என்றும் வாடிக்கையாளர்கள் புகார் செய்துவருகின்றனர்
பல எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நேற்று முதல் யோனோ பயன்பாட்டில் உள்நுழையவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யவோ முடியாததால் தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து புகார் கூறத் தொடங்கினர். சில வாடிக்கையாளர்கள் இப்போதுவரை இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்கிறார்கள். அதுபோலவே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்புவதில் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். வங்கி தனது ஆன்லைன் சேவைகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்கிறதா என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
ஸ்டேட் வங்கியின் மொபைல் பயன்பாடான யோனோ, ‘M005’ என்ற பிழைக் குறியீட்டைக் காண்பிப்பதாகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கடுமையான சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் பல எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 22 அன்று, எஸ்பிஐ ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை இந்த வங்கி எதிர்கொண்டது.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்