புரெவி புயலானது மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயலானது, டிச.4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, “ புரெவி புயலானது பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே வடக்கிழக்கே 600 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு இலங்கையைக் கடந்து, நாளை காலை மன்னார் வளைகுடா பகுதியாக குமரிக்கடல் பகுதிக்கு வரக்கூடும். தற்போது புயலானது 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/297143464945024/?t=136
இதனால் இராமாநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும்
நாளை இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் அதிகனமழை பெய்யும். தரைக்காற்று 45 கிமீ முதல் 55 கிமீ வரையும், இடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த மூன்று நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னர் வளைகுடா ஆகியப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” எனக் கூறினார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி