அண்மையில் காலமான தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா? என தனது அறிக்கை மூலம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அதில் அவர் தெரிவித்துள்ளது…
“வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு உயிருக்குப் போராடிய போது அதிமுகவின் தலைமை பல நூறு கோடி ரூபாயை திரும்ப பெறுவதற்காக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே மரண அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்களின் ஆட்சியில் ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் என்பதை புறக்கணிக்க முடியவில்லை.
அமைச்சர் குடும்பத்திடம் கொடுத்து வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 300 கோடி முதல் 800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்கின்றன செய்திகள். இதில் கணக்கில் வராத தொகை எவ்வளவு?
திரு. துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா?
பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
பணத்தால் சட்டமன்றத் தேர்தலை வளைக்கலாம் என்ற @CMOTamilNadu கும்பலின் பகல் கனவு பலிக்காது! pic.twitter.com/HAM6yZBt9J — M.K.Stalin (@mkstalin) November 8, 2020
துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனை கைது செய்ய ஐ.ஜி தலைமையில் 500 காவலர்கள் எதற்கு? பயங்கர பின்னணி என்ன? மேலும் நான்கு ஆதரவாளர்கள் கைது ஏன்?
மரணக்குழியிலும் ஊழல் நாற்றம் அடிக்கும் தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா முதலமைச்சர்? துதி பாடி ‘பரிசில்’ பெறும் சிறு கூட்டத்தார் கருத்து தெரிவிப்பார்களா?
வருமான வரித்துறை, வருமான புலனாய்வு துறை, தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? மத்திய புலனாய்வுத் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் இந்த செய்தி தெரியாதா? சீட் பேரத்திற்காக வேடிக்கை பார்த்தபடி அனுமதிக்கிறதா பாஜக அரசு?
பணத்தைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் அதிமுகவின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?