இது என்ன அயன் மேன் கெட்டப்பா!! கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக காமன் டிபி வெளியீடு

Common-DP-released-for-Kamal-Haasan-birthday

வரும் 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி காமன் டிபியை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார்.


Advertisement

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் 1954 ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்தார். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உலக நாயகனாக மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர், வரும் நவம்பர் 7 ஆம் தேதி தனது 66 வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். இதுவரை 231 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் 232 வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, பிக்பாஸ் வீட்டிலும் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதோடு ’தனித்து போட்டி’ என்று அரசியலிலும் அதிர வைத்துள்ளார்.

 image


Advertisement

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், காமன் டிபியை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த காமன் டிபி அப்பாவின் அன்பான ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. எனது அன்புக்குரிய அப்பாவின் பிறந்தநாளுக்கான காமன் டிபியை வெளியிடுவது பெருமையாக உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த காமன் டிபியில் கமல்ஹாசன் பாகுபலி பட பிரபாஸ் போல் கவச உடையில் உள்ளதோடு, அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமும் இடம்பெற்றுள்ளது.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement